சுதந்திர தினம் பேச்சு போட்டி 2024
பிறந்து சிறந்த மொழிகளிலே, சிறந்தே பிறந்த மொழியாகிய என் அன்னைத் தமிழுக்கும், வீரம் நிறைந்த தமிழ் மண்ணுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம். என் பெயர் ஜனனி.
O அண்ணல் காந்தியின் அகிம்சையால் கிடைத்த சுதந்திரம்
பகத்சிங்கின் புரட்சியால் கிடைத்த சுதந்திரம்
பாரதியின் கவிதை கனலால் கிடைத்த சுதந்திரம்
வேலுநாச்சியாரின் லட்சியத்தால் கிடைத்த சுதந்திரம்
கட்டபொம்மனின் கம்பீரத்தால் கிடைத்த சுதந்திரம்
கொடி காத்த குமரனின் கொந்தளிப்பால் கிடைத்த
உ சுதந்திரம்!
தியாகிகளின் உயிர் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம்!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!!
இன்று ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தியத் திருநாடு 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது. நமது சுதந்திரமானது எளிதாகக் கிடைக்கவில்லை. உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும் கிடைத்தது. அந்நிய ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்த நாம், இன்று அச்சமின்றி வாழ்வது நம் தியாகிகள் பெற்று கொடுத்த சுதந்திரத்தால் தான்.
17ஆம் நூற்றாண்டில் இந்தியா 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களைக் கொண்டு இருந்தது. அப்போதுதான் ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்ய வந்தனர். அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்தி ஒவ்வொரு சமஸ்தானத்தையும் தன் வசமாக்கினர். 18ம் நூற்றாண்டிலிருந்தே சில மன்னர்களும், பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர்.
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ”” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, பல வீரர்கள் தமது வாழ்க்கையினை இந்திய சுதந்திரத்திற்காக தியாகம் செய்தனர். சுதந்திர போராட்டத்தில் பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, ராணி லக்ஷ்மி பாய், இராணி வேலு நாச்சியார், பாரதியார், கட்டபொம்மன், வ.உ.சி, கொடி காத்த குமரன், வாஞ்சிநாதன் போன்ற பல தலைவர்களும், வீரர்களும் மிக முக்கிய பங்காற்றி உள்ளார்கள். பலர் தங்கள் இன்னுயிரை நாட்டிற்காக ஈந்தார்கள்.
இந்திய விடுதலைக்காக அகிம்சை வழியில் காந்தியும், “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி?" என கவிதை வாள் கொண்டு பாரதியும், "உங்களின் ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு விடுதலையை கொடுக்கிறேன்.” என நேதாஜியும், "சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” என பால கங்காதர திலகரும், 'புரட்சி வாழ்க!' என பகத் சிங்கும் முழங்கினர்.
தன்னலம் பாராமல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் பங்கு மகத்தானது. தேசிய அளவில் ஜான்சிராணி, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும், தமிழகத்தில் வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, கடலூர் அஞ்சலையம்மாள், லீலாவதி அம்மையார் போன்ற பல பெண் போராட்ட வீரர்களும் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் ஆவர்.
அறவழி போராட்டத்தின் நிலை உச்சம் அடைந்ததனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் அளித்தனர். சுதந்திர தினமான இன்று, டெல்லி செங்கோட்டையில் மாண்புமிகு பிரதமர் அவர்கள், கொடியேற்றி வைத்து உரையாற்றுவார். முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். தேசத்தின் வாழ்வு தன்னை வெள்ளை அரக்கர்கள் ஆட்கொண்டபோதிலும் அகிம்சையில் காந்தியும் கவியில் முண்டாசு கவிஞனும் வீரமாய் வீரபாண்டிய கட்டபொம்மனும் எண்ணற்ற வீரர்களின் எண்ணிகரில்லா எழுச்சியில் பிறந்த சுதந்திரத்தை ஒற்றுமையாகக் கைகோர்த்து பேணி காத்திடுவோம் என்றென்றும்!!
"முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்" என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப சாதி, மதம், மொழி என வேறுபாடுகள் பல இருந்தாலும் “நாம் அனைவரும் இந்தியர்கள்” என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறோம்.
“உதிரங்களை உரமாக்கி உதித்த சுதந்திரம் நம் சுதந்திரம்! மனதில் விடுதலை, வார்த்தைகளில் நம்பிக்கை உள்ளத்தில் பெருமை போங்க முழங்குவோம் வந்தே மாதரம்!''
என்று கூறி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன். நன்றி! வணக்.
Also read: पावसातील एक दिवस मराठी निबंध
Also read: Essay on Lakshadweep For Students & Children's
Also read: India On Moon Essay in Hindi for Students
Also read: Essay On Garbage Free India in English
Also read: Matdan Jan Jagruti Nibandh Marathi
THANK YOU SO MUCH
Comments
Post a Comment