சுதந்திர தினம் பேச்சு போட்டி 2024 பிறந்து சிறந்த மொழிகளிலே, சிறந்தே பிறந்த மொழியாகிய என் அன்னைத் தமிழுக்கும், வீரம் நிறைந்த தமிழ் மண்ணுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம். என் பெயர் ஜனனி. O அண்ணல் காந்தியின் அகிம்சையால் கிடைத்த சுதந்திரம் பகத்சிங்கின் புரட்சியால் கிடைத்த சுதந்திரம் பாரதியின் கவிதை கனலால் கிடைத்த சுதந்திரம் வேலுநாச்சியாரின் லட்சியத்தால் கிடைத்த சுதந்திரம் கட்டபொம்மனின் கம்பீரத்தால் கிடைத்த சுதந்திரம் கொடி காத்த குமரனின் கொந்தளிப்பால் கிடைத்த உ சுதந்திரம்! தியாகிகளின் உயிர் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம்! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!! இன்று ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தியத் திருநாடு 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது. நமது சுதந்திரமானது எளிதாகக் கிடைக்கவில்லை. உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும் கிடைத்தது. அந்நிய ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்த நாம், இன்று அச்சமின்றி வாழ்வது நம் தியாகிகள் பெற்று கொடுத்த சுதந்திரத்தால் தான். 17ஆம் நூற்றாண்டில் ...