ஒரு மரத்தின் பார்வையில் கட்டுரை | A LIVING WITNESS THROUGH THE EYES
"மரம் இயற்கையின் வரம் ! மனிதனின் உயிர் மூச்சு! மழையின் தாய்! நிழல் தரும் தேவதை!” என்பது அழகிய பொன்மொழி. மரம் இல்லா ஊர் பாலைவனம். பாலைவனத்தையும் சோலைவனமாக்குவது மரங்கள் தான். ஒரு மரத்தின் பார்வையில் வெளிப்படும் கருத்துக்களை இக்கட்டுரையில் காணலாம். என் பயன்கள் மரமாகிய நான் நிழல், மழையைத் தருகின்றேன் . மனிதருக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறேன். காய், கனி, கீரை போன்றவற்றைத் தருகின்றேன். எங்கள் சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
மரம் வளர்ப்பதால் நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறேன். விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடமாகத் திகழ்கிறேன். என் வேதனை நாங்கள் மனித செயற்பாடுகளால் அழிக்கப்பட்டு வருகிறோம்.
குடியிருப்பு அமைத்தல், தொழிற்சாலைகளை அமைத்தல், சாலைகள், விமான நிலையங்கள் அமைத்தல், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல் போன்ற காரணங்களால் எங்களை அழிக்கின்றனர்.
மேலும் காட்டுத்தீ, நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளப்பெருக்கு முதலான இயற்கைக் காரணங்களாலும் நாங்கள் அழிக்கப்படுகிறோம்.
மரங்கள் அழிக்கப்படுவதால் வரும் தீமைகள் எங்களை அழிப்பதனால் காலநிலை மாற்றம், பூகோள வெப்பமயமாதல், பச்சைவீட்டு விளைவு, கடல் மட்ட உயர்வு போன்ற பல பிரச்சனைகள் வருகின்றன. இது பூமிக்கும் உயிரினங்களுக்கும் நல்லதல்ல.
எனவே நீங்கள் எங்களை அழிக்காது பாதுகாக்க வேண்டும். மரங்கள் பாதுகாப்பு நாங்கள் அழிவதைத் தடுக்க காட்டுவளம் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும். மரம் வளர்ப்பு தொடர்பாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மரம், செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும். மிக முக்கியமான ஒரு விஷயம் எங்களை நடுவது மட்டும் குறிக்கோள் அல்ல, அந்த செடி மரம் ஆகும் வரை காப்பற்ற வேண்டும்.
முடிவுரை
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை” என்ற வரிகளுக்கு ஏற்ப நாங்கள் பல வகையிலும் பயன்படுகிறோம். எனவே எங்களை பாதுகாத்து பூமியை காப்பாற்றுங்கள். ‘வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள். மரம் வளர்த்து மழை பெறுங்கள்! பசுமையான உலகாக மாற்றுங்கள்” என்று உங்களை வேண்டுகின்றேன்.
Also read: A Living Witness An Essay Through The Eyes Of A Tree 100 Words
Also read: Maram Naduvom Speech in Tamil | மரம் நடுவோம் பேச்சு
Also read: Guruvai Potruvom Speech In Tamil
Also read: கல்வியின் சிறப்பு பற்றிய தமிழ் கவிதை
THANK YOU SO MUCH
Comments
Post a Comment